Wednesday, May 4, 2011

அன்புத் தோழிக்கு..

உன் மனதின் கவலை நண்பன் என் கண்ணில் கண்ணீராய்
என் மனதின் மகிழ்ச்சி தோழி உன் உதட்டில் புன்னகையாய்




தாயின் அன்பு தந்தையின் அறிவுரை உடன்பிறப்பின் பாசத்துடன்
தோழி உன் நட்பும் கலந்ததே
என் வாழ்க்கை .
 

கவிதைத் துளிகள்...

நட்பின் முதல் வரி
என்னை நீ முதன்முதல் அழைத்தது..
உன் பார்வையில் என் நட்பு
தாழ்ந்திருக்கலாம் ஆனால்
வீழ்ந்திருக்காது...


உன் அழகைப் பற்றிப் பேச
நான் அழகானவனுமில்லை...
அழகும் அழகுமில்லை...
உன் குணத்தைப் பற்றிப் பேசவா...
கோபக்காரி,...கொடுமைக்காரி,
ஆனாலும் அதுதான் உன் அழகு...

வானிலாவும் வந்திங்கு வணங்கும்
கதிரோனும் கட்டுண்டு விடுவான்
புயலும் புன்னகைக்கும்
இடியும் இனிதாகும்
ஆழிப்பெருக்கும் அன்பு ஊற்றெடுக்கும்...
இத்தனைக்கும் மேலாய்
இறையும் இரைஞ்சும்
இனியவென் நட்பிற்கு...
உணராது போனாயே நீ.........


நட்பைப் புரிந்து கொள்ள
நட்பாய் மட்டும் நடக்க முயற்சிக்காதீர்...
நம்பியும் நடக்க முயற்சியுங்கள்.
 

நட்பின் முகவரிக்கு ஒரு கடிதம்...

இதயம் கனத்தொரு கணம்
கண்ணும் நீர் சொரிகிறது
உள்ளிருந்து ஒரு சொல் தாளாது
வெளிவந்தும்
கேளாது எச் செவியுமெனவே
தேம்பியேவிட்டது...


எனக்கும் உனக்கும் இடையில்
உள்ள நட்பில்
வலியது உன் கோபமென அறிந்தும்
மீண்டும் முயற்சித்து வீண்போகிறது என் மனது...


உன் புன்னகை என் நட்புத் தோட்டத்தில்
பூத்திடும் நாளும் வரும்...
உன் சொற்கள் என் நட்பேட்டில்
பதிந்திடும் நாளும் வரும்...

உன் நட்பிற்காய் என் கண்கள்
அழுது ஓய்ந்த பின்
உன் கண்களும் அழுதிடும்...
அப்பொழுது ஆறுதலாய்
உன் கண்ணீர் துடைக்கும் என் நட்பு.